எம்மைப் பற்றி

பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான `தமிழோசை' 81 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை வழங்கிவந்தது. 2016-ஆம் ஆண்டு முதல் இணையதளத்தில் முழுமையாக செய்திகளை வழங்கி வருகிறது.

பிபிசி தமிழ்: 1941-ல் தொடங்கிய பயணம்

  • பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான தமிழோசை 1941-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது
  • வாரம் ஒரு நாள் வந்து கொண்டிருந்த எமது நிகழ்ச்சி, எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என உருமாறி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக முன்னேற்றம் கண்டது
  • தமிழகம் (தென்னிந்தியா), இலங்கை ஆகிய இடங்களில் எமது வானொலி நிகழ்ச்சி சிற்றலை ஒலிபரப்பில் ஒலிபரப்பாகி வந்தது.
  • வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என கடல் கடந்து வாழும் தமிழர்கள் எமது நிகழ்ச்சியை இந்த இணையதளம் மற்றும் பல்வேறு மறு ஒலிபரப்புகள் மூலமாகக் கேட்டுவந்தனர்
  • 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, ஐந்து நிமிட உலகச் செய்தியறிக்கை இலங்கையில் உள்ள எமது கூட்டாளி நிறுவன வானொலி மூலமாக பண்பலையிலும், பிபிசி தமிழின் ஃபேஸ்புக் பக்கத்திலும் வா�� நாட்களில் நேரலையாக ஒலிபரப்பாகி வருகிறது. bbc.com/tamil/ என்ற எமது இணையதளத்தில் அந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்
  • மேலும், 2016ஆம் ஆண்டு முதல் பிபிசி தமிழ் இணையதளத்தில் முழுமையாக செயல்பட்டு வருகிறது. அத்துடன், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யு டியூப் ஆகிய சமூக ஊடகங்களிலும் பிபிசி தமிழ் இயங்கி வருகிறது.