பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி நியூஸ் தமிழ் இப்போது உங்களது வாட்ஸ்ஆப்பில்!

பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.

உலக மற்றும் உள்ளூர் செய்திகளை எழுத்து வடிவிலும் காணொளி வடிவிலும் எங்கள் செய்தியாளர்கள் உருவாக்குகிறார்கள்.

2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் சேனல் வசதி, பயனர்கள் தாம் விரும்பும் தனிநபர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து தகவல்களைப் பெற வழிவகை செய்கிறது.

பிரிட்டனில் செப்டம்பர் 2023இல் தொடங்கப்பட்ட பிபிசி வாட்ஸ்ஆப் சேனலை தற்போது 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

தற்போது தமிழ் வாசகர்களும் பிபிசி தமிழின் செய்திகள் மற்றும் காணொளிகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே பெறலாம்.

பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி?

மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் இந்த லிங்கை க்ளிக் செய்யவும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

நீங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஐஃபோன் பயன்படுத்தினால், வாட்ஸ்ஆப்பை திறந்த பிறகு Chat பிரிவில் இருப்பீர்கள். உங்களது திரையின் கீழ் பகுதியை கவனித்தால் Chat பிரிவுக்கு அருகில் Communities பிரிவு இருக்கும், அதற்கு இடது புறம் Calls பிரிவு இருக்கும். Bottom Tabs-ல் Calls-க்கு இடதுபுறம் Updates பிரிவு இருக்கும்.

வாட்ஸ்ஆப்பின் Updates என்ற பகுதிக்கு கீழாக BBC NEWS TAMIL என்று டைப் செய்து தேடுவதன் மூலமும் கண்டறியலாம்.

பிபிசி வாட்ஸ்ஆப் சேனலை தேடுவது எப்படி?
படக்குறிப்பு, Updates பகுதியை அடைவது எப்படி?

சேனலை பின் தொடர்ந்த பிறகு, 'மணி' வசதியை (Bell Icon) கிளிக் செய்து UNMUTE செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் பிபிசி தமிழ் சேனலில் பகிரப்படும் எந்த செய்தியும் உங்களைத் தவறாமல் வந்தடையும். தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் ��ேனலை நீங்கள் MUTE செய்து கொள்ளலாம்.

நாங்கள் பகிரும் செய்திக்கு எமோஜி மூலம் நீங்கள் எதிர்வினையாற்ற முடியும். அதே போல, நீங்கள் விரும்பும் செய்தியை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது வேறு குழுக்களுக்கோ எளிதாக பகிரவும் முடியும்.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான மெட்டா, உங்கள் மொபைல் எண் விவரங்களையோ, பெயரையோ, முகப்பு படத்தையோ நீங்கள் பின்தொடரும் சேனலில் உள்ள யாராலும் பார்க்க முடியாது எனக் கூறுகிறது.

பிபிசி வாட்ஸ்ஆப் சேனல்கள் மற்றும் கம்யூனிட்டீஸ் தனியுரிமை பற்றி விரிவாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.