ராசிபலன்

ரிஷபம்

இன்றைய பலன்:

ரிஷபம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிறரை சந்திப்பவர்களுடன் அளவோடு பேசுவது நல்லது. இன்று திடீர் ஆதாயங்கள் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6 நிறம்: வெண்மை, பச்சை

வாரப் பலன்:

அன்­புள்ள ரிஷப ராசிக்­கா­ரர்­களே,

நிழல் கிரகமான ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. சுக்கிரன், சந்திரன், புதன் நற்பலன்களைத் தருவர். சூரியன், சனி, குரு, கேது, செவ்வாயால் நலமில்லை.

நல்லவர்களைத் தேடிச் சென்று அரவணைக்கும் பண்பாளர்கள் நீங்கள். தற்போது வாழ்க்கைப் பயணத்தில் புதுச் சிக்கல்கள் ஏதும் முளைக்காது எனலாம். அடுத்து வரும் நாள்களில் வழக்கமான வேலைகள் காத்திருக்கும். அவற்றைச் சிக்கலின்றி செய்து முடிப்பீர்கள் என நம்பலாம். தடைகள் அறவே இருக்காதா என்பதுதான் உங்கள் கேள்வி எனில், வழக்கமான நிலை நீடிக்கும் என்பதே பதில். சில முக்கியமான பொறுப்புகளை மட்டும் உங்களது நேரடிக் கண்காணிப்பில் செய்து முடிக்கப் பாருங்கள். பொருளியல் நிலைமை குறித்து யோசிக்க ஒன்றுமில்லை. வழக்கமான தொகைகள் வந்து சேரும் எனில், வழக்கமான செலவுகளும் வரிசைகட்டி நிற்கும். சிலருக்கு சேமிப்புகளில் கைவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. தலைவலி, காயச்சல் என சிறு கோளாறுகள் தோன்றி மறையக்கூடும். பயணங்கள், புது முயற்சிகள் நல்ல அனுபவங்களைத் தரும். சொத்துகள் தொடர்பான முயற்சிகள், மங்கலப் பேச்சுகள் முன்னேற்றும் காணும். பணியாளர்களும் வியாபாரிகளும் உழைப்பில் குறைவைக்க வேண்டாம். வார இறுதியில் இனிக்கும் தகவல்கள் கிட்டும். இச்சமயம் நல்லவர்களுடன் அறிமுகமாவீர்கள்.

குடும்ப நலன் தொடர்பில் கணிசமான தொகை செலவாகும்.

அனுகூலமான நாள்கள்: ஜூலை 3, 5

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7