நரேந்திர மோதியின் பிம்பத்தை ராகுல் காந்தியால் உடைக்க முடியவில்லையா?- சசிகாந்த் செந்தில் எம்.பி நேர்காணல்

காணொளிக் குறிப்பு, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் நேர்காணல்.
நரேந்திர மோதியின் பிம்பத்தை ராகுல் காந்தியால் உடைக்க முடியவில்லையா?- சசிகாந்த் செந்தில் எம்.பி நேர்காணல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக 5.72 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திருவள்ளூர் எம்.பியாக உள்ளார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில்.

இந்த மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது எப்படி? ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தது ஏன்? காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்தது ஏன்? நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியின் செயல்பாடு, மோதியின் பின்பத்தை ராகுல் காந்தியால் உடைக்க முடியவில்லையா? குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்றபோதிலும், காங்கிரஸ் கொண்டாடுவது ஏன்? கூட்டணியை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளதா? போன்ற பல கேள்விகளுக்குத் திருவள்ளூர் எம்.பியான சசிகாந்த் செந்தில் அளித்த நேர்காணல் காணொளி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)