பிரிட்டன் - இந்தியா உறவை புதிய பிரதமர் கியர் ஸ்டாமரால் வலுப்படுத்த முடியுமா? சிக்கல்கள் என்ன?

காணொளிக் குறிப்பு,
பிரிட்டன் - இந்தியா உறவை புதிய பிரதமர் கியர் ஸ்டாமரால் வலுப்படுத்த முடியுமா? சிக்கல்கள் என்ன?

ஸ்டாமர் தலைமையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி மாநாட்டில் பிரேரணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரில் மனித உரிமை தொடர்பான சிக்கல்கள் இருப்பதை மேற்கோள்காட்டியிருந்தது. காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதை இந்தியா எதிர்த்தது.

அக்கட்சியின் முன்னாள் தலைவர் கார்பைனோ இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம் எனக் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரின் கருத்து இரு நாட்டு உறவிலும் சுமூகமான ஒரு நிலையை எட்ட உதவவில்லை.

ஸ்டாமர், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார். அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ��றுப்பினரான ஷர்மா இருநாட்டுக்கும் இடையிலான உறவு ஸ்டாமரின் ஆட்சிக் காலத்தில் மேம்படும் என்று குறிப்பிட்டார்.

"இந்த நிலை நிச்சயமாக மாறும். கடந்த நாடாளுமன்றத்தில் 6 இந்திய வம்சாவளி எம்.பிக்கள் இடம் பெற்றனர். அவர்களின் பிரதிநிதித்துவம் தற்போது உயரும். ஸ்டாமர் சமநிலையான எதார்த்தவாதி. அவர் இருநாட்டு உறவு மேம்படுவதை உறுதி செய்வார்," என்றும் குறிப்பிட்டார் ஷர்மா.

பிரிட்டன் - இந்தியா உறவை புதிய பிரதமர் கியர் ஸ்டாமரால் வலுப்படுத்த முடியுமா? சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம், Reuters

பாஜ்பாய் இதுகுறித்துப் பேசுகையில், இரு நாட்டு உறவு மேம்பாடு அவ்வளவு எளிமையாக இருக்காது என்கிறார். "தொழிலாளர் கட்சியின் கீழ் இந்தியா – பிரிட்டன் உறவு சவால்கள் மிக்கது. மதிப்புரீதியான வெளிநாட்டுக் கொள்கைகளைச் செயல்படுத்துவதைத்தான் அதன் அரசு விரும்பும். தொழிலாளர் கட்சி மனித உரிமை தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தும்.

பிரிட்டனில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்கள் இந்தியர்கள், 12 லட்சம் பாகிஸ்தானியர்கள், இந்தியாவின் நிலைப்பாடு அல்லது இறையாண்மைக்கு சவால்விடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் குழுக்கள், பரந்துபட்ட அரசியல் மற்றும் இடம்சார் அரசியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் யாவும் இரு நாட்டின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என மேற்கோள் காட்டியுள்ளார் பாஜ்பாய்.

டேவிட் லாம்மி வெளியுறவுத்துறை செயலாளராகப் பொறுப்பேற்றால் இரு நாட்டு உறவும் வலுப்பெறும் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"தெற்காசியா பற்றிய புரிதல் அவருக்கு உள்ளது. இந்தியாவின் தற்போதைய ஆட்சி ஒரு கூட்டணி ஆட்சி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இது இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்போது சமச்சீராகச் செயல்பட உதவும்," என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)