65 லட்சம் குழந்தைகளின் கல்வியைப் பாதித்த சூடான் உள்நாட்டுப் போர்

காணொளிக் குறிப்பு, சூடான் உள்நாட்டு யுத்தத்தால் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி பாதிப்பு
65 லட்சம் குழந்தைகளின் கல்வியைப் பாதித்த சூடான் உள்நாட்டுப் போர்

இது ஆப்பிரிக்காவின் சாட் தேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மெட்ச் அகதிகள் முகாமில் உள்ள பள்ளி. சூடானில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் இருந்து தப்பித்த குழந்தைகள் இங்கு கல்வி கற்கின்றனர். ஆசிரியர் ஹனன் ஆடமும் ஒரு அகதிதான்.

சூடான் ராணுவத்தின் இரு போட்டிப் பிரிவுகளுக்கு இடையிலான சண்டையால் சுமார் ஐந்து லட்சம் பேர் அருகிலுள்ள சாட் நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.

இந்தப் பள்ளி நார்வீஜியன் அகதிகள் சபையால் அமைக்கப்பட்டது. பள்ளி செல்லும் வயதிலுள்ள 20,000 குழந்தைகளில் 1,800 குழந்தைகள் மட்டுமே இங்கு படிக்க முடியும்.

சூடானில் நிலவும் போர் காரணமாக, 65 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சண்டையை நிறுத்துவதற்கான சர்வதேச கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)