'எலும்புகள் உடைந்தன’ - இஸ்ரேலிய படைகளால் அடைத்து வைக்கப்பட்ட பாலத்தீன கைதிகளின��� துயரம்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை
'எலும்புகள் உடைந்தன’ - இஸ்ரேலிய படைகளால் அடைத்து வைக்கப்பட்ட பாலத்தீன கைதிகளின் துயரம்

இஸ்ரேலியப் படைகளால் அடைத்து வைக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் தங்கள் எலும்புகள் உடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு நபர் தனது கழுத்து உடைக்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். மற்றொருவர் கழிவறைக்குக் கூட தன்னால் சுதந்திரமாகச் செல்ல முடியவில்லை என விவரிக்கிறார்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் உடல் நலிவுற்றவர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

வன்முறை அல்லது சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

மேலும் விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)