புதிய 'சீர்திருத்தவாதி' அதிபர் இரானை உலக நாடுகளுக்கு அருகில் கொண்டு வருவாரா? - காணொளி

காணொளிக் குறிப்பு, புதிய 'சீர்திருத்தவாதி' அதிபர் இரானை உலக நாடுகளுக்கு அருகில் கொண்டு வருவாரா? - காணொளி
புதிய 'சீர்திருத்தவாதி' அதிபர் இரானை உலக நாடுகளுக்கு அருகில் கொண்டு வருவாரா? - காணொளி

50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது.

ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது.

இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார்.

அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் பெசெஷ்கியன் போன்ற சீர்திருத்தவாதி சிறந்த வேட்பாளர் இல்லை என்றாலும், அவரைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இருப்பினும், இம்முறை தங்களுக்கு மெலிதான வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பெசெஷ்கியன், தன் முழு பலத்தை வெளிப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினர்.

மசூத் பெசெஷ்கியன்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)