தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dindigul Vs Salem: ‘இவரது பேட்டிங் ஆட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது’-திண்டுக்கல் கேப்டன் அஸ்வின்

Dindigul vs Salem: ‘இவரது பேட்டிங் ஆட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது’-திண்டுக்கல் கேப்டன��� அஸ்வின்

Manigandan K T HT Tamil
Jul 09, 2024 10:50 AM IST

SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது. சொந்த மண்ணில் சேலம் அணி தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது

Dindigul vs Salem: ‘இவரது பேட்டிங் ஆட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது’-திண்டுக்கல் கேப்டன் அஸ்வின்
Dindigul vs Salem: ‘இவரது பேட்டிங் ஆட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது’-திண்டுக்கல் கேப்டன் அஸ்வின்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 34 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பக்கபலமாக விமல் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். 

சேலம் அணியின் பெளலிங்கைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்கள் சன்னி சந்து மற்றும் ஹரீஷ் குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்த, இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. 

சேலம் அணிக்கு நல்ல தொடக்கம்

முதல் விக்கெட்டிற்கு ஓப்பனர்கள் அபிஷேக் (28) மற்றும் கவின்(46) இணைந்து 59 ரன்கள் சேர்த்து சேலம் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். திண்டுக்கல் அணியின் அனுபவ பந்துவீச்சாளர்களான

அஷ்வின், வருண் மற்றும் சந்தீப் போன்றவர்களின் பந்துவீச்சை சமாளித்து இளம் மற்றும் அனுபவமற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சேலம் அணியின் பேட்டர்கள் சிதறடித்தனர். முந்தையப் போட்டியில் சேலம் அணிக்கு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் இந்தப் போட்டியிலும் தனது திறமையை நிரூபித்து 8 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மேலும் இதுவரை இந்த சீஸனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தினார்.

அட்டகாசமான அரை சதம்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் அதிரடி பேட்டரான விவேக் ராஜ் (51*ரன்கள் 28 பந்துகள்) தனது சொந்த மண்ணில் அட்டகாசமான அரைசதத்தை அடித்து உள்ளூர் மக்களை உற்சாகப்படுத்தினார். மேலும் டி.என்.பி.எல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த 16வது வீரர் என்ற சாதனையையும் இந்தப் போட்டியில் விவேக் ராஜ் எட்டினார். 

திண்டுக்கல் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தும் அவர்களது மோசமான ஃபீல்டிங் அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது. இறுதியில் SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்து இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியை சொந்த மண்ணில் ருசித்தது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த திண்டுக்கல் டிராகன்ஸின் கேப்டன் அஷ்வின் பேசுகையில், “இந்த விக்கெட் சேலம் அணிக்கு மிகச்சரியாக கைகொடுத்தது என்று நினைக்கிறேன். அதோடு விவேக் ராஜின் தைரியமான பேட்டிங் ஆட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது” என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற விவேக் ராஜ் பேசுகையில், “சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது, எனது பேட்டிங்கைப் பார்க்க எனது ஊரிலிருந்து வந்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று விவேக் தெரிவித்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய சேலம் அணியின் கேப்டன் ஷிஜித் சந்திரன், “இந்த வெற்றி நிச்சயம் எங்களுக்கு ஊக்கத்தையளிக்கும் அதோடு விவேக் ராஜ் சிறப்பாக விளையாடினால் ஆட்டம் விரைவாக முடிந்துவிடுமென்று எங்களுக்குத் தெரியும்” என்று அவர் கூறினார்.

போட்டி முடிந்த பின் பேசிய திண்டுக்கல் அணியின் விமல்குமார் ,”நாங்கள் இன்னும் கூடுதலாக 10-15 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும்”, என்றார்.

போட்டி முடிந்த பின் பேசிய சேலம் அணியின் பொய்யாமொழி பேசுகையில், “இந்த பிட்ச் நின்று வந்ததால் நாங்கள் அதிகமான வேகத்துடன் பந்துவீசாமல் வேகத்தைக் குறைத்து பந்துவீசினோம் அந்த திட்டம் எங்களுக்கு கைகொடுத்தது”, என்று பொய்யாமொழி தெரிவித்தார்.

1."இந்தப் போட்டியின் கேம்பா கிரேட் இந்தியன் ஸ்ட்ரைக்கர் விருதை”  விவேக் ராஜ் வென்றார்.

2.”பூம் பூம் பூமர் கோல்டன் விக்கெட் விருதை” சன்னி சந்து வென்றார். 

3.”இந்தப் போட்டியின் பூமர் வுமன் அதிக டாட் பந்துகளுக்கான விருதை”  சன்னி சந்து வென்றார்.

4.”இந்தப் போட்டியின் இன்சூரன்ஸ் தேகோ சேஃப் ஹேண்ட்ஸ் விருதை” ஆர். கவின் வென்றார்.

5.”இந்தப் போட்டியின் பிரிட்டிஷ் எம்பயர் பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் ஹை வோல்டேஜ் வீரருக்கான விருதை” தினேஷ் ராஜ் வென்றார்.

6.”இந்தப் போட்டியின் ஐஓபி மோஸ்ட் டிபென்டபிள் வீரருக்கான விருதை” பாபா இந்திரஜித் வென்றார்.

7.”இந்தப் போட்டியின் ஷேரான் பிளை சூப்பர் 6இல் அதிக சிக்ஸர் அடித்த வீரருக்கான விருதை” விவேக் ராஜ் வென்றார்.

8. “ஸ்ரீராம் அதிக ஃபோர்கள் அடித்த வீரருக்கான விருதை” ஆர்.கவின் பெற்றார்.

9.”ஸ்ரீராம் கேபிட்டல் ஆட்டநாயகன் விருதை” விவேக் ராஜ் வென்றார்.

போட்டியின் முன்னோட்டம்:

போட்டி 7: இன்று இரவு 7.15 மணிக்கு சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியனான சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த தொடரில் இதுவரை வெற்றியை ருசித்திடாத திருச்���ி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஏற்கனவே மதுரை அணி தங்களின் முதல் போட்டியில் சேலம் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் நாளை களமிறங்கவுள்ள நிலையில் திருச்சி அணியோ முதல் போட்டியில் திண்டுக்கல்லிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தங்களின் முதல் வெற்றியைத் தொடர்ந்து தேடி வருகிறது.

இன்றைய போட்டி

இரவு : 7.15 மணிக்கு

இடம் : சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம்

சீகம் மதுரை பேந்தர்ஸ் v திருச்சி கிராண்ட் சோழாஸ்

 

WhatsApp channel

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.