தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Jasprit Bumrah: “ரொம்ப தூரம் போகனும், இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன்!”ஓய்வு குறித்து மனம் திறந்த ஜஸ்ப்ரீத் பும்ரா

Jasprit Bumrah: “ரொம்ப தூரம் போகனும், இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன்!”ஓய்வு குறித்து மனம் திறந்த ஜஸ்ப்ரீத் பும்ரா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 05, 2024 05:55 PM IST

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அணியின் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார்.

ஓய்வு குறித்து மனம் திறந்த ஜஸ்ப்ரீத் பும்ரா
ஓய்வு குறித்து மனம் திறந்த ஜஸ்ப்ரீத் பும்ரா (BCCI-X)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா வெற்றி பெற்று பின்னர் அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் இருந்தபோது, ஸ்டார் பேட்ஸ்மேனான விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்கள். 

அடுத்தடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு ஷாக்காக அமைந்தாலும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக அவர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு பலரும் தங்களது மதிப்பையும் அளித்தனர்.

இதையடுத்து இந்திய அணியின் ஸ்டார் பந்து வீச்சாளராக இருக்கும்  ஜஸ்பிரித் பும்ரா ஓய்வு அறிவிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனது ஓய்வு குறித்து அவர் மனம் திறந்துள்ளார். 

ஓய்வு குறித்து பும்ரா கருத்து

வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவின் போது ஓய்வு திட்டம் குறித்து பும்ராவிடம் கேட்டபோது, “ரொம்ப தூரம். இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் என்று” கூறினார்.

முன்னதாக, மும்பையில் நடந்த நிகழ்வின் போது, ஹென்ரிச் கிளாசென் களத்தில் இருக்க கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்று இருந்த போது, தனது அற்புத பவுலிங்கால் தென் ஆப்பரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தார் பும்ரா. ஒன்மேன் ஆர்மி போல் பும்ராவின் செயல்பாடு தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியை பவுன்ஸ் பேக் செய்ய உதவியது. போட்டிக்கு பின்னர் பும்ராவின் செயல்பாடு குறித்து கோலி வெகுவாக பாராட்டினார். முக்கியமான கட்டத்தில் 2 ஓவர்கள் வீசிய அவர் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். திணறடிக்கும் பவுலிங்கால் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்தார். இதன் காரணமாக 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென் ஆப்பரிக்கா முதல் உலகக் கோப்பை வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

கோலி பாராட்டு

"இங்குள்ள மைதானத்தில் உள்ள அனைவரையும் போலவே, நாங்களும் ஒரு கட்டத்தில் அது மீண்டும் நழுவப் போகிறதா என்று உணர்ந்தோம், ஆனால் அந்த கடைசி ஐந்து ஓவர்களில் என்ன நடந்தது என்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த போட்டியில் எங்களை மீண்டும் மீண்டும் விளையாட்டுகளுக்கு கொண்டு வந்த ஒரு பையனை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடைசி 5 ஓவர்களில் 2 ஓவர்களை வீசி அசத்தினார். தயவு செய்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு பெரிய கைதட்டல். அவர் எங்களுக்காக விளையாடுவது எங்கள் அதிர்ஷ்டம்" என்று இந்தியாவின் முன்னாள் கேப்டன் கூறினார்.

17 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல பும்ரா முக்கிய பங்கு வகித்தார். அவர் வெறும் 8.26 என்ற எகானமியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக உள்ளார். 

அவரது சிறந்த செயல்திறன்களில் ஒன்றாக இறுதிப் போட்டியில் அமைந்திருந்தது. டெத் ஓவர்களில் மிகவும் சிக்கனமான ஸ்பெல்லை வீசி தென் ஆப்பிரிக்கா வெற்றியை் தடுத்தார்.

கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் போட்டிக்குப் பிறகு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும், பும்ரா தான் இங்கு தங்குவதை உறுதிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.