தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலைகீழாக மாற்றும் குரு.. குடும்பத்தின் மகிழ்ச்சி.. செல்வத்தின் உயர்வு.. பணமழை ராசிகள் நீங்கள் தான் பாருங்க!

தலைகீழாக மாற்றும் குரு.. குடும்பத்தின் மகிழ்ச்சி.. செல்வத்தின் உயர்வு.. பணமழை ராசிகள் நீங்கள் தான் பாருங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 09, 2024 05:19 PM IST

Guru Bhagavan: கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையில் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தலைகீழாக மாற்றும் குரு.. குடும்பத்தின் மகிழ்ச்சி.. செல்வத்தின் உயர்வு.. பணமழை ராசிகள் நீங்கள் தான் பாருங்க!
தலைகீழாக மாற்றும் குரு.. குடும்பத்தின் மகிழ்ச்சி.. செல்வத்தின் உயர்வு.. பணமழை ராசிகள் நீங்கள் தான் பாருங்க!

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

குருபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த��ம். கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையில் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை வழங்க உள்ளது பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை கஷ்டப்பட்டு இருந்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும்.

கடக ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை தரப்போகின்றது. அபரிமிதமான செல்வத்தை உங்களுக்கு கொடுக்க போகின்றார். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மேன்மையை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9